• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நல்லுத்தேவன்பட்டி கண்மாய் சீரமைப்பு பணிகளை துவக்கிய கிராம மக்கள்..,

ByP.Thangapandi

Aug 1, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போத்தம்பட்டி- நல்லுத்தேவன்பட்டி கண்மாய் 23.29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.,

இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயகவும் இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகிறது.,

இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோழிக்கடை கழிவுகள், மண்டப கழிவுகள், குப்பைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டிவிட்டு செல்வதால் தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருவதாக கூறப்படுகிறது.,

இது குறித்து பல முறை மாதாந்திர நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கழிவுகள், குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.,

இந்நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் போத்தம்பட்டி- நல்லுத்தேவன்பட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் முறையாக அனுமதி பெற்று இன்று பொதுப்பணித்துறை, விவசாய சங்கத்தினர், கிராம மக்கள் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கண்மாயை சீரமைப்பு பணியை துவங்கியுள்ளனர்.,