• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..,

ByP.Thangapandi

Jul 31, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனின், தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.,

உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் இடைமறித்து சோதனையிட்ட போது அவர் 2 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்களை பாக்கெட்களாக கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.,

பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்த நிலையில், உத்தப்பநாயக்கணூர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,