• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எல்.எம்.டபிள்யூ டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி – ரூ.12 லட்சம் பரிசு வழங்கி கௌரவிப்பு..,

BySeenu

Jul 31, 2026

கோவையில் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் நடத்திய 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி–2026 வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 37 நாடுகளைச் சேர்ந்த 2,334 புகைப்படக் கலைஞர்கள் அனுப்பிய 12,278 புகைப்படங்கள் போட்டியில் இடம்பெற்றன.

கஸ்தூரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில், எல்.எம்.டபிள்யூ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் தேர்வான சிறந்த புகைப்படங்களின் கண்காட்சி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை பொதுமக்கள் பார்வைக்காக நடைபெறுகிறது.