• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர்கள் பரிசீலனை செய்து கொடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2026

இருபது ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் எப்படி இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இது எப்படி இருக்கிறது என்றால், தொடர்ந்து பயிற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு குறிப்பிட்ட வினாடிக்குள் இலக்கை அடைய வேண்டும் என்று நேரத்தை நிர்ணயம் செய்து, அந்த இலக்கை அடைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற விதியை ஏற்படுத்திப் போட்டியை நடத்துவது போன்றதாகும்.

அது இளைஞர்களுக்குச் சாத்தியம். ஆனால், அதே போன்ற விதியை நிர்ணயம் செய்து, 50 வயதிற்கு மேல் உள்ளவர்களையும், தொடர் பயிற்சியில் உள்ள இளைஞர்களுக்கு நிர்ணயித்த அதே வினாடிக்குள் ஓடி முடிக்க வேண்டும்; அப்படி ஓடி முடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று சொல்வதைப் போன்றுதான் இப்போது நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கிறது. எனவே, ஏற்கனவே அனைத்து ஆசிரியர் சங்கங்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சராசரியாக 40 விழுக்காடு மதிப்பெண்ணைத் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்ய வேண்டும். அதில் 20 விழுக்காடு மதிப்பெண்ணைப் பணிமூப்பு மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செய்முறைக்காக வழங்கி, தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்

12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள் அவர்கள் அனைவரையும் சிறப்பு தகுதி நடத்தி காலமுறை ஊதியத்தில் கொண்டு வரவேண்டும் காலத்தாமதம் ஏற்படும் பட்சத்தில் பணி நிரந்தரம் செய்யும் வரை அவர்கள் அனைவரையும் வாரத்தில் அனைத்து வேலை நாட்களும் பணியாற்றும் பொருட்டு ஆணை வழங்கி மாதம் ரூ. 25.000/- ஊதியம் வழங்க வேண்டும்

கடந்த 15 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடை நிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று ஊதிய முரண்பாட்டை சரி செய்து ஊதியம் வழங்க வேண்டும் , மேலும் கடந்த ஆட்சியில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர் அப்போது ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது , பிடித்தம் செய்யப்பட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு ஈட்டிய விடுப்பாக கருதி ஊதியம் வழங்க வேண்டும்

ஏழை அவசு பள்ளிகளில் முழுக்க முழுக்க ஏழ்மையில் பெற்றோர்கள் தின கூலியாக பணியாற்றுவதால் மாணவர்கள் பள்ளிகளில. நடக்கும் காலாண்டு அரையாண்டு திருப்புதல் தேர்வு , பருவத் தேர்வுகள் கட்டணத்தை செலுத்த மாணவர்கள் இயலாது மிகவும் சிரமம் படுகிறார்கள் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து மாணவர்களுக்கு உதவிட வேண்டும்

பல பள்ளிகளில் பல ஆண்டுகள் முன்னர் கட்டப்பட்ட கட்டடங்கள் இடியும் நிலையிலும் வளாகத்தில் வரைமுறையின்றி மாணவர்கள் கண்காணிக்க முடியாத நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து ஒரே சீரான பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எங்கு சென்றாலும் ஆசிரியர்கள் பார்வையில் படுகின்ற அளவிற்கு வளாகம் இருப்பதை உறுதி செய்து உதவிட வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் சமூக நீதி ஆட்சியில் நிறைவேற்றி கொடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஆ.ராஜ்மோகன் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.