• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற கோரிக்கை ..,

ByKalamegam Viswanathan

Jul 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் மற்றும் உயரமான அளவில் கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காமராஜர் சிலை பகுதி ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் கடைவீதி மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தென்கரை முள்ளி ப்பள்ளம் மேலக்கால் திருவேடகம் ஆகிய சோழவந்தானை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் பலர் பேனர்களை வைத்துள்ளனர்.

இந்த பேனர்களால் பொதுமக்கள் வர்த்தகர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பெண்கள் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் மாணவிகளின் கல்வி கவனம் சிதறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் சோழவந்தான் பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி உடைந்தது மட்டுமல்லாமல் பேருந்தின் உள்பகுதியில் பேனரின் கம்பி புகுந்து பெறும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

அந்த நேரத்தில் பேருந்துகள் முன் பகுதியில் பயணிகள் இல்லாததால் பெரும் உயர் சேதம் தவிர்க்கப்பட்டதாக விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். இது போன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுக்க சோழவந்தான் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.