• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்..,

BySeenu

Jul 24, 2026

கோவை மாநகர காவல் பி5 வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு முகாம் வடவள்ளி ரவுண்டானா அருகே சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து துணை ஆணையர் மகேஸ்வரன் மற்றும் உதவி ஆணையர் திரு. ராஜ்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு முகாமிற்கு வடவள்ளி போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி மற்றும் உதவி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அதன் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து அவர்களை அமர வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சாலை விதிகளைத் தவறாமல் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக எவ்வாறு உதவுவது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்குச் சிறப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் தனியார்க்கல்லூரி மாணவர்கள் மற்றும் ‘உயிர்’ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.