• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வரின் நோக்கம் அதை நோக்கி தான் பயணிக்கிறோம் – சிடிஆர் நிர்மல் குமார்..,

ByKalamegam Viswanathan

Jul 18, 2026

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோளங்குரணி கிராமத்தில் போத்தி ராஜன் வள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 21 ஆண்டுகளாக அந்த கிராமத்து மக்கள் கோவிலுக்கு செல்ல திருவிழாவை நடத்த பாதை இல்லாமல் தவித்து வந்த நிலையில் இதுகுறித்து சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் தெரிவித்தனர்.

அவரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தருவேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார். தொடர்ந்து அமைச்சர் ஆன பின்னர் அதனை நிறைவேற்றிக் கொடுத்த நிலையில் அமைச்சருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து கோவில் திருவிழாவிற்கு தலைமை தாங்க அழைப்பு விடுத்த நிலையில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று கிராம மக்களுடன் சேர்ந்து கோவில் திருவிழாவில் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசும்போது:

21 ஆண்டுகளுக்குப் பிறகு 35 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று சந்தோஷமாக அவர்கள் கோவில் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள் இது 800 வருட பாரம்பரியம். கண்டிப்பாக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள் அதற்காக வந்து மக்களுடன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டேன். மக்கள் அடிப்படை உரிமை அவர்களின் பாரம்பரியம் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் அதிலும் ஆங்காங்கே தடைகள் ஏற்படுகிறது. 800 வருட நடைமுறையை 21 வருடமாக செய்ய முடியாமல் சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்பது வியப்புடையது. மதுரை போன்ற மாநகரக்குள்ளேயே 21 வருடங்களாக அவர்களுக்கு உரிமை இருந்தும் போக முடியவில்லை அந்த சூழ்நிலையை கூட ஏற்படுத்தி தர முடியாத நிலை இங்கே உள்ளது. இன்னும் கிராமங்களில் என்ன சூழ்நிலை இருக்கும் என்று யூகிக்க முடியாது.

பொதுமக்களுக்கு அடிப்படை உரிமைகள் என்ன தேவைகள் இருக்கோ அது அனைத்தும் அவங்களுடைய உரிமை மீண்டும் பொதுமக்களுக்கு சொல்கிறோம் இது மக்களுடைய அரசு அவர்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் அண்ணன் விஜயின் அரசு அவர்களுக்கு தேவையானதை செய்வதுதான் இந்த அரசு. நிறுவனங்களுக்கு பின்னாடி செல்வதும் அவர்களுக்கு வேண்டியதை செய்யும் அரசியல் தலைவர்கள் தான் இருந்திருக்கிறார்கள்.25 ஆண்டுகளாக மக்கள் போராடி ஒரு குவாரியை மூட முடியவில்லை நாங்கள் அதை மூடி உள்ளோம். அதேபோல் நிறைய இடத்தில் மீட்டு கொடுத்துள்ளோம் மக்களுடைய வாழ்க்கை தான் முக்கியம் அவர்களுக்கு கேடுதல் செய்தோ எந்த விஷயத்தையும் செய்ய முயற்சி செய்யப் போவதில்லை. இதில் கலந்து கொண்டது மிகுந்த சந்தோசம் அவர்களின் சந்தோஷத்தை பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷம் முதல்வர் விஜய்க்கு வாக்களித்ததற்கு இது அவர்களின் அரசு என்று உணரும் தருணமாக பார்க்கிறேன்.

அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு:

வழக்கமாக பட்ஜெட்டுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் தான் நடைபெற்றது. வரவு செலவு கணக்குகள் தான் தாக்கல் செய்யப்பட்டது. முடிவுகள் வச்ச தாக்கல் செய்யும்போது வரும்.

முதல்வர் அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்யக்கூடாது ரீல்ஸ் போடக்கூடாது என்று அறிவுறுத்தினாரா என்ற கேள்விக்கு:

முதல்வர் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னாடியே எங்களுக்கு சொன்னது எந்த தவறும் செய்யக்கூடாது மக்களுக்கான சேவை மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் தான் எஜமானர்கள் லஞ்ச, லாவண்யம், தவறு, மக்களுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது. ஒவ்வொரு கூட்டத்திலும் முதல்வர் இதை சொல்லி இருக்கிறார். கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வரின் முதலாவது நோக்கம் அதை நோக்கி தான் பயணிக்கிறோம் அமைச்சரவை கூட்டத்திலும் முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் சொன்னார்.

மகளிர் உரிமைத் தொகை குறித்தது எதுவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு: பட்ஜெட் முடிவுக்குப் பின் தெரியும். தொடர்ந்து கோவிலில் வைத்து அரசியல் வேண்டாம் இன்னொரு நாள் தெளிவாக பேசுவோம் என்றார்.

விமானம் வானில் வட்டமடித்தது குறித்த கேள்விக்கு: விமானம் தரையிறங்குவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை எனவே 15 நிமிடம் பறந்தது அதற்கு மேல் விவரம் தெரியவில்லை என்றார்.