• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாகம்மாள் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

ByP.Thangapandi

Jul 17, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16 வது வார்டு பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் அமைந்துள்ளது.,

இந்நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகம்மாள் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், குங்குமம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.,

தொடர்ந்து ஐந்து தலையுடன் நாகம்மாள் அம்மனுக்கு வளையல்கள் மாலை, எலுமிச்சை மாலை, மல்லிகை பூ மாலை உள்ளிட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.,

தொடர்ந்து விநாயகர், நாகம்மாளுக்கு பூஜைகள் நடைபெற்றது.,

தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள நாகம்மாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது., திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.,

தொடர்ந்து ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு பெரிய அண்டாவில் கூல் காய்ச்சி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.,