மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.,

தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலை அலுவலர் ஜீவா தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் மளமள வென எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.,
இதில் கூட்ட அரங்கம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,
இதில் காலை நேரம் என்பதால் கூட்ட அரங்கில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.,
இதில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான ஏசி இயந்திரங்கள், டேபில்,சேர்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.,

தனியார் தங்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் மளமள வென எரிந்த வந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.,
மேலும் இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,
தனியார் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.,




