• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காமராஜர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்: பள்ளி தாளாளர் பெருமிதம்..,

ByS.Ariyanayagam

Jul 15, 2026

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞான சீலா முன்னில வகித்தார்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் பேசியதாவது:
மூன்றாம் வகுப்பு கூட படிக்காதவர் தான் நம்முடைய முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர். இந்தியாவுக்கே வழிகாட்டியவர். வீட்டுக்கு மட்டுமல்ல ,நாட்டுக்கும் முன் உதாரணமாக இருந்தவர். இங்குள்ள ஆசிரியர்கள் பலர், அவர் அளித்த மத்திய உணவை சாப்பிட்டு வேலைக்கு வந்தவர்கள்.

தமிழகத்தில் இப்படி ஒரு தலைவர் தோன்றியிருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை. நமது குழந்தை அனைவரும் முகமூடி அணிந்து இன்று பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பாக உள்ளது. காமராஜரின் கல்வித் திட்டங்கள், தொழில் திட்டங்கள், அணைகள் கட்டியது அனைத்தும் அவருடைய சிறப்பு என்று சொல்லலாம். ஆடம்பரம் இல்லா வாழ்க்கை. ஆசையில்லா இதயம். அன்பே வடிவான உருவம். மக்களோடு சகஜமாக பழகும் அவரைப் போல ஒரு தலைவரை நாம் பார்க்க முடியாது. அவர் புகழ் வாழ. நமது குழந்தை செல்வங்கள் அவரை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் என். எஸ் .எஸ். மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.