• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காமராஜர் பிறந்த நாளையொட்டி “எல்-நினோ” வெய்யிலை எதிர்கொள்ள விழிப்புணர்வு உறுதிமொழி..,

Byமுகமதி

Jul 15, 2026

புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

காமராஜர் திருவுருப் படத்திற்கு மாணவர் ஆதி மாறன் முன்னிலையில் மழலைக் குழந்தைகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். கல்விக் கண் திறந்த காமராஜர் என்ற பெயரில் மாணவ மாணவிகள் பங்கேற்ற சுழல் கவியரங்கம் நடைபெற்றது. ஆசிரியைகள் ஊழியர்கள் அஅனைவருக்கும் கல்வி வளர்ச்சி சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக ‘எல் நினோ’ வெப்பத்தை எதிர்கொள்ள குழந்தைகள் முதியவர்கள் வெயிலில் செல்லக் கூடாது, இறுக்கமான உடைகளை அணியக்கூடாது,அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், வீடு தோறும் மரக்கன்றுகளை நட வேண்டும் உள்ளிட்ட வெய்யில் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.பள்ளி தாளாளர் மல்லிகா கணேசன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.