• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

புஷ்பாவில் குத்தாட்டம் யசோதாவில் பத்திரிகையாளராக நடிக்கும் சமந்தா

புஷ்பா படத்தில் கெட்ட ஆட்டம் போட்டு கவர்ச்சியில் இளைஞர்களை கிறங்கடித்த நடிகை சமந்தா அதற்கு முற்றிலும் மாறுபட்ட கண்ணியமான பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் யசோதா நடித்திருக்கிறார்

ஹரி-ஹரிஷ் இயக்கி வரும் யசோதா படத்தில் எழுத்தாளராக நடித்து வருகிறார் சமந்தா. அவருடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கி முடிவடைந்துள்ள நிலையில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் யசோதா படத்தை மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். மேலும், காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் என சமந்தா நடித்துள்ள படங்கள் ரிலீசுக்கு தயார்நிலையில் உள்ளன.