கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில விஜய் பங்கேற்ற த.வெ.க கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர்கள் பலியானார்கள் .286 நாட்கள் கழித்து தற்போது உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு விதிகளுக்கு புறம்பாக தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது.
தகுதி தேர்வுகளை முறைப்படி எழுதி தங்களின் அரசு வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக நாள் கணக்கில், ஆண்டு கணக்கில் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தின் அரசு வேலை தேடுபவர்களை வயிற்றிலே அடிக்கும் வஞ்சிக்கும் வகையில் கரூரில் உயிரிழந்த வாரிசுகளுக்கு அரசு பணி நியமனங்களை நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.இந்த தவறான முன்னுதாரணம் நாடு முழுவதும் இளைய சமுதாயத்திற்குபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் அரசு பணி நியமனங்கள் அனைத்தும் டி.என்.பி.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பது இதுவரை கடைபிடித்து வருகிற சட்ட விதியாகும். குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக லட்சக்கணக்கான ஏழை எளிய சாமானிய குடும்பங்களை சேர்ந்த இளைய சமுதாயத்தைச் சேர்ந்த அந்த இளம் சிங்கங்கள் இரவு, பகலாக ஊண்,உறக்கம் பார்க்காது இந்த நாட்டுக்காகவும், தன் குடும்ப தாய் தந்தைகள, உற்றார் உறவினர்களை நெஞ்சிலே தூக்கி சுமப்பதற்காக அரசு வேலைக்காக படித்து கொண்டிருக்கிற அந்தப் பட்டதாரிகளுக்கு தலையில் இடி விழுந்தது போல கரூர் சம்பவம் இன்றைக்கு நடந்திருக்கிறது.
இப்படி ஒரு நிலை இருக்கும்போது நம்ம முதல்வரே முன் நின்று போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிற வேலையில்லா பட்டதாரிகளின் நம்பிக்கை சிதைக்கின்ற வகையில் முறையான தகுதி தேர்வுகள் எதுவும் இன்றி அரசியல் காரணங்காக, அரசு வேலைகளில் விதிகளில் மீறி சட்டத்தை மீறி வழங்குவது அரசியல் தவறான அணுகு முறையாகவும் . இதனால் ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் ஆவேசமடைந்து, கொதிப்படைந்து இருப்பதை ம முதல்வர் அறிவாரா?
இது அரசு பணிக்காக பல ஆண்டுகளாக பதிவு செய்து நம்பிக்கையோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான பட்டதாரிகளை தெரு கோடியிலே நிறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய் அரசியலுக்காக அரசு பணியை தாரை வார்க்கும் இந்த முன் உதாரணத்தை நேற்றைய தினம் தொடங்கி வைத்திருப்பதால் இப்போது தமிழ்நாட்டில் ஆச்சரியம் தொடங்கி இருக்கிறது
அனைத்து அரசியல் கட்சித் தலைவரிடம் இருந்து பல்வேறு நிலைகளிலே உயிரிழந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு இழப்பீடாக அரசு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை தமிழகத்திலேயே எட்டு திசைகளில் எழுந்து வருகிறது .
கோவை குண்டு வெடிப்பிலே கொல்லப்பட்ட குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை இழப்பீடாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை, காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடாக அரசு பணி வழங்க வேண்டும என்ற கோரிக்கை, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வாரிசுகளுக்கு இழப்பீடாக அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை,
1987 ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சமூக நீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை,மழை வெள்ளத்தால் தமிழகத்தில் ஏற்படும் பேரிடர் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு சுனாமி போன்ற பேரிடர்களின் காலங்களிலே நிலச்சரிவு பெருவெள்ளம் பெருமழை தொடர் மழை இது போன்ற பேரிடர்களால் ஏற்படும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாரிசுகளுக்கு இழப்பீடாக அரசு பணி வழங்க வேண்டும், அதோடு பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு பணி வழங்கி ஒளியேற்றி வைத்திட முதல்வர் விஜய் முன் வரவேண்டும் என்று கோரிக்கையை எட்டு திசை எதிரொலித்து வருகிறது யார் கொடுத்த ஆலோசனை நமக்கு தெரியாது

த.வெ.க கட்சி கூட்டத்தில் விஜய் பங்கேற்று கூட்டத்தில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி என்ன ,5 கோடி என்ன, 10 கோடி ரூபாய் த.வெ.க கட்சி நிதியாக கொடுத்திருந்தால் இது யாருக்கும் எந்த விதமான வருத்தம் இருந்திருக்காது. எல்லோரும் முதல்வர் விஜய் தன்னை நம்பி வந்தவர்களை கரை ஏற்றுவதற்காக 10 கோடி நிதி வழங்கிருக்கிறார் என்று பாராட்டு பத்திரம் நாமும் கூட வாசித்து இருப்போம் .
ஆனால் அரசு அதிகாரிகளை சந்திக்க மாட்டேன், ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எதை சொல்ல விரும்பினாலும் விஜயின் பவர் சென்டர்களான ஜான் ஆரோக்கியசாமி விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோரிடம் சொல்லுங்கள் என்று முதல்வர்சொல்லிவிட்டதாக செய்தி வருகிறது அரசு அதிகாரியிடம் ஆலோசனை கேட்டிருந்தால் உருப்படியான ஆலோசனை சொல்லி இருப்பார்கள்.
விஜயின் பவர் சென்டர்களாக உள்ள ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி போன்றவர்களுக்கு இந்த ஆலோசனைக்கான வெளிச்சம் இதனால் தமிழகத்தில் இளைய சமுதாயத்தின் வாழ்க்கையிலே ஏற்பட்டிருக்கிறது இருட்டு ஏற்பட்டுள்ளது என கூறினார்.




