• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

விநாயகர் கோவிலில், மர்ம நபர்கள் சிலைகளை சேதப்படுத்தி சென்ற சம்பவம்..,

ByP.Thangapandi

Jul 10, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான விநாயகர் திருக்கோவில்., பொங்கல் திருவிழா காலங்களில் விநாயகருக்கு முதல் பொங்கல் வைத்த பின்பே கிராமத்தில் உள்ள கோவில்களில் திருவிழா கொண்டாடப்படுவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.,

இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி பொன்கணேசன், கோவில் சிலைகள் சேதமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நாகர் சிலை மற்றும் விளக்குதூண் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி விட்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.,

கோவில் பகுதியில் மது பாட்டில்கள் அதிகமாக கிடப்பதால் மது போதையில் யாரேனும் கோவில் சிலைகளை சேதப்படுத்தி சென்றனரா என்ற கோணத்திலும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.,