• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதியில் வறண்டு கிடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Jul 8, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதிகளில் வறண்ட கடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள சோழவந்தான் மேலக் கால் பகுதி வைகை ஆற்றுப்பகுதி வறண்டு பாலைவனம் போல் காட்சி தருகிறது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக சோழவந்தான் வைகை ஆற்று பகுதியில்10க்கும் மேற்பட்ட குடிநீர் வழங்கும் தொட்டிகள் விவேகானந்த கல்லூரி அருகே திருமங்கலம் நகராட்சிக்கு செல்லக்கூடிய குடிநீர் தொட்டிகள் தச்சம்பத்து பகுதியில் மதுரை அவனியாபுரம் பகுதிக்கு செல்லக்கூடிய குடிநீர் தொட்டிகள் மேலக்கால் பகுதியில் தேனூர் மற்றும் கருமாத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் எடுக்கக்கூடிய தொட்டிகள் மேல காலையில் இருந்து தனியாக குடிநீர் நீரேற்று நிலைய பகுதியிலிருந்து கோச்சடை சென்று அங்கிருந்து மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கக்கூடிய தொட்டிகள் வைரையாற்றுப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தந்த பகுதி நகராட்சி மாநகராட்சி நிர்வாகங்கள் மூலம் அமைக்கப்பட்டு அதன் மூலம் தங்கள் பகுதிக்கு தேவையான குடிநீரை கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படுவதால் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய குடிநீர் தொட்டிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அந்தந்த பகுதிகளில் அடுத்த சில மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். சென்ற ஆண்டுகளில் இதே காலங்களில் வைகை ஆற்றில் வைகை அணையில் இருந்து குடிநீருக்காக போதுமான தண்ணீர் சென்று கொண்டிருக்கும்.

ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக வைகை ஆறு வறண்டு காணப்படுவதால் அடுத்தடுத்து வரும் நாட்களில் மேலும் வறட்சி காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மேலும் வைகை அணையில் இருந்து குடிநீருக்காக போதுமான அளவு தண்ணீரை திறந்து விட வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.