மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குழந்தைகள் மற்றும் பார்வையற்றோர் அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு ஸ்கூல் பேக் நோட் புக் மற்றும் எழுதுபொருள் மற்றும் பெரியவர்களுக்கு ஸ்டிக் வாட்ச் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏழை கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி கல்வி கட்டணம் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கப்பட்டது. விழாவிற்கு கல்வி சர்வதேச பொதுப்பள்ளி குழுமம் பொது மேலாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகி தர்ஷினி விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று அறிமுகம் செய்து விழாவை தொகுத்து வழங்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர் திலக் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் அகில இந்திய வழக்கறிஞர் தமிழ்நாடு சங்கத் தலைவர் சாமித்துறை அகில இந்திய காங்கிரஸ் மாணவப் பிரிவு தேசிய செயலாளர் ராஜீவ்காந்தி சென்னை தீபன் சக்கரவர்த்தி மாப்பிள்ளை விநாயகர் சோடா இயக்குனர் கார்த்திகேயன் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரின்ஸ்பால் தங்கராஜ் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் உடைய செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினர். இதில் பங்கேற்ற பார்வையற்றோர் நல சங்கத்தினர் ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர்திலக் எம்பி அவர்களிடம் தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்றோர் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இந்த விழாவில் மதுரை மாநகரில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் ஆகியோர் உறவினர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை நிர்வாகி தர்ஷினி பேசுகையில் எங்களது நோக்கம் கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தருவது குறிப்பாக கிராமங்களில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தருவது குழந்தைகளிடம் பேசும் போது பள்ளிக்குப் போக சொல்கிறீர்கள். ஆனால் எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லை என்று சொல்கிறார்கள். இதை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்று தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுபோக தனியார் மூலமும் அதிகம் உதவி செய்து வருகிறோம் வருடத்திற்கு 60 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று உள்ளோம் பார்வையற்றோருக்கு பத்தி ஊதுபத்தி வாங்கி கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு உதவி செய்துள்ளோம் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்கள் 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன் அவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளோம்
5 லட்சம் ரூபாய்க்கு உதவிகள் செய்துள்ளோம் இவ்வாறு கூறினார்
தொடர்ந்து எம்பி கிறிஸ்டோபர் திலக் பேசுகையில்
கல்வியில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் கல்வித்தரம் நன்றாகவே உள்ளது அதற்கு காரணம் கல்வியில் 200 வருட பாரம்பரியம் உள்ளது 1970 முதல் கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது ஆரம்பப் பள்ளிகள் பிரைமரி பள்ளிகள் கிட்டத்தட்ட 100 வருடத்திற்கு முன்பே தமிழகத்தில் வந்துவிட்டது இந்த பாரம்பரியத்தில் வந்ததால் இங்கு அடிப்படை கல்வி நன்றாகவே உள்ளது மற்ற மாநிலங்களை விட அரசு பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் நிறைய வேறுபாடு உள்ளது அதை சரி செய்வது ஒரு சேலஞ்ச் ஆக உள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக இந்த பள்ளி தாளாளர் செந்தில் நிறைய ஐடியாக்கள் கொடுத்துள்ளார் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்து நிறைய மாற்றங்களை கல்வியில் கொண்டு வந்துள்ளார் இவரும் அரசு பள்ளியில் படித்து வந்ததால் இரண்டையும் பேலன்ஸ் செய்வதில் அவருக்கு சிரமம் இல்லை என்று நினைக்கிறேன் கல்வித் துறை அமைச்சரை பார்த்து ஒரு சிலவற்றை ஷேர் செய்யலாம் என்று இருக்கிறேன் நான் வந்து பாராளுமன்ற கல்வி ஆலோசனை குழு உறுப்பினராக இருக்கிறேன் எம்பி ஆகி இரண்டு மாதம்தான் ஆகிறது ஆகையால் இந்த துறையில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன் கட்டிடங்கள் கட்டுவது தீர்வாகாது ஆசிரியர்கள் பயிற்சி எப்படி உள்ளது இன்றைய டெக்னாலஜியை எப்படி செயல்படுத்துகிறார்கள் அரசு பள்ளியில் மிக சுலோவாக டெக்னாலஜி உள்ளது
மாவட்ட ஆட்சியர் ஆட்சியரிடம் பேசியபோது மாணவர்களுக்கான நெட்வொர்க் ரீச் சரியாக இல்லை என்று தெரிகிறது
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடுகள் சம்பந்தமாக கேள்விக்கு
நான் கேள்விப்பட்ட வரையில் இரண்டு மாதமாக எந்த முறைகேடும் நடக்கவில்லை இதை மீடியாவிலும் பேசுகிறார்கள் ரியல் எஸ்டேட் தொழிலிலும் லஞ்சம் குறைந்துள்ளது என்று பேசுகிறார்கள் மந்திரி அளவில் ஊழலை தடுக்க வேண்டும் என்று பெரும் முயற்சியில் உள்ளார்கள் என்னை பொறுத்தவரை பார்ட்டிபண்ட் குறைந்துள்ளது ஊழியர்கள் வாங்கியது குறைந்துள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தமிழக முதல்வர் என்ன சொல்ல வேண்டுமோ அதை சட்டமன்றத்தில் சொல்லிவிட்டார் இதுபோக மந்திரிகள் தரப்பில் அவர்கள் துறை சார்ந்த விஷயங்களை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து சொல்கிறார்கள் முதல்வர் துறைக்கு எதை சொல்ல வேண்டுமோ அதை சட்டமன்றத்தில் கூறிவிட்டார் எல்லா முதல்வர்களும் செய்தியாளர்களை ஒரே மாதிரி அணுக வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது பிரதமர் மோடி 15 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை அது போல் இருப்பார் என்று தமிழக முதல்வரை சொல்ல வரவில்லை வேறு துறையில் இருந்து இப்போதுதான் வந்துள்ளார் போகப்போக பத்திரிகையாளர்களை சந்திப்பார்
ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது வந்தாலும் காங்கிரஸ் அதனை எதிர்க்கும் போன முறை மகளிர் மசோதா ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்த்ததை போல் தற்போதும் எதிர்ப்போம் எம்பிக்களை ஆட்டைய போட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு துடிக்கிறது அதை காங்கிரஸ் முழு பலத்துடன் எதிர்க்கும் இவ்வாறு கூறினார்





