கோவை, குப்பிச்சிபாளையம் ரயில்வே பாலம் அருகே சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபர் மற்றும் கோவை எம.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த நபர் ஆகிய இருவரை, 1 கிலோ 50 கிராம் கஞ்சாவுடன் போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்பொழுது குப்பிச்சிபாளையம் ரயில்வே மேம்பாலம், பால் பூத் அருகே உள்ள மரத்தடி நிழலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று இருந்த இருவரிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.
அப்பொழுது அவர்களிடம் 1 கிலோ 50 கிராம் கஞ்சா விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதனைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோகேஸ்வர் பாக் (26) என்பதும் தற்போது கோவை கஸ்தூரிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது அவருக்கு உதவியாக இருந்த கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (31) இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் இருவரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.





