• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2வது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர்..,

ByKalamegam Viswanathan

Jul 6, 2026

மதுரை வெள்ளக்கல் குப்பை கிடங்கு பகுதிகளில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் வெங்கட்ராமன் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மதுரை மாநகராட்சி தண்ணீர் வாகனங்கள் துணையுடன் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ அதிகமாக பரவி வருகிறது.

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட புகை அவனியாபுரம் சிந்தாமணி சாமநத்தம் பெருங்குடி வெள்ளக்கல் பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.