புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில்

திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தருமபுர ஆதீனம் சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திருநள்ளாறு ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு தருமபுர ஆதீனம் மடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தில் காலை முதல் இரவு வரை அன்னதான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் திருநள்ளாறு ஆலயத்திற்கு வருகின்ற ஏராளமான பக்தர்கள் தருமபுர ஆதீனம் மடத்தில் உள்ள அன்னதான கூடத்தில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் மகிழ்ச்சியோடு உணவு சாப்பிட்டு செல்கிறார்கள்.





