விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் அடையாளமாக விளங்குவது வைப்பாறு இந்த வைப்பாட்டிற்கு பல்வேறு பாரம்பரிய வரலாறுகள் உள்ளது சாத்தூரில் பாரம்பரிய திருவிழாவான மணல்மேடு திருவிழா இந்த வைப்பாற்றின் மணற்பகுதியில் தான் நடைபெறும் நடைபெறும் வைப்பாற் நின் கரையில் பல்வேறு பண்டைய கால நாகரிகங்கள் இருந்துள்ளதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்பொழுது வைப்பாறு வறண்டு காணப்படுவதுடன் முள்செடிகள் நிறைந்த காடு போல் காட்சி அளிக்கிறது மேலும் நகர்ப்பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் வைப்பாற்றில் கலப்பதால் வைப்பாற்றுப் பகுதி மிகவும் மோசமடைந்து சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதியாக இருக்கிறது.
வைப்பாற்றை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்பது சாத்தூர் நகர் பகுதியில் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இன்னர் வீல் எனும் பெண்கள் அமைப்பு சார்பில் வைப்பாற்றை மீட்டெடுப்போம் எனும் கோஷத்துடன் வைப்பாற்றில் ஆக்கிரமித்துள்ள முட் செடிகளை அகற்றி வைப்பாற்றில் இரு கரைகளிலும் செழுமைமிகு மரங்களை நட்டி பராமரிக்கும் சிறப்பான திட்டத்தை கையில் எடுத்தனர். இந்த நடவடிக்கையின் தொடக்க விழா இன்றுநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கலந்துகொண்டு நிகழ்ச்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் வட்டாட்சியர் வடிவேலு ஆணையாளர் ஜெகதீஸ்வரி நகர்மன்ற சேர்மன் குருசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் இன்னர் வீல் மகளிர் தொண்டு நிறுவன சாத்தூர் கிளைத்தலைவர் சுபலட்சுமி ஒருங்கிணைப்பாளர்கள் ஜென்சி, நித்யா மற்றும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வைப்பாற்றை மீட்டெடுப்போம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பலர் வைப்பாற்றின் கரை ஓரங்களில் மரக்கன்றுகளையும் நட்டனர். வைப்பாற்றினை சுத்தப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனை தொடர்ந்து பராமரிக்கும் பணியினையும் மேற்கொள்ளும் மகளிர் தொண்டு நிறுவன அமைப்பின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.





