• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மகன் கண்முன்னே தந்தையை வெட்டிய கொழுந்தியா கள்ளக்காதலன் மற்றும் 3 பேர் கொண்ட கும்பல்..!

ByKalamegam Viswanathan

Jul 3, 2026

திருப்பரங்குன்றம் திருமலையூர் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் அறிவரசன் (வயது 40) இவர் கப்பலூரில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜய பாரதி கடந்த சில வருடங்களாக இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது கொழுந்தியா சிவரஞ்சனிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து அவர்கள் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்கள். ஆனால் சிவரஞ்சனி தவறாக நடவடிக்கையில் இருப்பதாக தகவல் அறிந்த அறிவரசன் கொழுந்தியா சிவரஞ்சனியை கண்டித்து ஒழுங்காக வாழ வேண்டும் என அறிவரசன் கூறியுள்ளார்.

இதில் கோபம் அடைந்த சிவரஞ்சனி தனது கள்ளக்காதலன் சௌந்தரிடம் கூற ஆத்திரம் அடைந்த சௌந்தர் நேற்று மாலை 5 மணி அளவில் கருப்பு கலர் TN 66 AM 1186 எண் கொண்ட பொலிரோ வாகனத்தில் ஆயுதங்களுடன் மூன்று நபர்களுடன் வந்த செளந்தர் அறிவரசன் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் அறிவரசன் மகன் புகழ் இனியன் இருந்துள்ளார். அப்போது உங்கள் அப்பா எங்கடா சௌந்தர் கேட்க அப்பா பாத்ரூம் சென்று உள்ளார். புகழ் இனியன் கூறியுள்ளான்.

அப்போது சவுந்தர் பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே இருந்த அறிவரசனை இழுத்து கீழ தள்ளி கத்தியால் குத்தியும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் அறிவரசனுக்கு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனை கண்ட மகன் புகழ் இனியன் அப்பாவை வெட்டிகிறார்கள் என
கூச்சிலிட்டான். அப்போது செளந்தர் மற்ற 3 நபர்கள் கருப்புகாரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். அதன் பின்பு அங்கிருந்த உறவினர்கள் பலத்த காயம் அடைந்த அறிவரசனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். இது குறித்து திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.