திண்டுக்கல் மாவட்டத்தில் தர மற்ற வகையில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு மையங்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வாடி மேலாண்மை முகமை மூலம் குஜிலியம்பாறை தோப்புப்பட்டி, ஆர் புதுக்கோட்டை, கோம்பை உள்ளிட்ட குஜிலியம்பாறை,வேடசந்தூர் தாலுகா முழுவதும் கடந்த சில வருடங்களாக பெரிய சிறிய தடுப்பணைகள் நிலத்தடி நீர் சேகரிக்கும் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

கட்டப்பட்ட தடுப்பணைகள் அனைத்தும் தரமற்ற முறையில் உள்ளது .இதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை பெரிய மழை பெய்தால் தடுப்பணை காணாமல் போகும் நிலை உள்ளது. மத்திய ,மாநில அரசுகளின் பல கோடி ரூபாய் நிதி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு உகந்ததாக உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தற்போது வரை மக்களுக்கு நம்பிக்கை தருகிறது. அதேபோல் வேடசந்தூர் தொகுதி முழுவதும் கட்டப்பட்ட வரும் தடுப்பணைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த சில வருடங்களாக அதிக அளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன அனைத்திலும் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. அனைத்தையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மீதும் அதற்கு உடந்தையாக உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





