• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா..,

ByKalamegam Viswanathan

Jul 3, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் திருவிழா தொடங்க உள்ளது. இந்த நிலையில் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா கோவில் முன்பு நடைபெற்றது. திருவிழாவானது 7 .7. 26 வருகின்ற செவ்வாய்க்கிழமை தொடங்கி 15. 7. 26 வரை நடைபெற உள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா வருகின்ற 14 .7 .26 அன்று நடைபெற உள்ளது திருவிழாக்கான ஏற்பாடுகளை முள்ளிப்பள்ளம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.