• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அதிமுக மூலம் டெண்டர் எடுத்து சம்பாதித்தவர்கள் தங்களின் சுயநலத்திற்காகவே தவெக விற்கு செல்கிறார்கள்..,

ByKalamegam Viswanathan

Jul 1, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் பகுதியில் அதிமுகவின் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்ற நிலையில்,

அதிமுகவின் உண்மை தொண்டர்கள் யாரும் செல்லவில்லை அதிமுக மூலம் பலனடைந்தவர்கள் அதாவது டெண்டர் எடுத்து சம்பாதித்தவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக தவெகாவிற்கு சென்றுள்ளார்கள் என்று அதிமுகவின் கடைநிலைத் தொண்டர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் சோழவந்தானில் எம்எல்ஏ கருப்பையா முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி தவெகாவிற்கு நிர்வாகிகள் சென்றுள்ளனர் அவர்கள் சோழவந்தானில் வைத்தியநாதபுரத்தில் உள்ள தேனூர் கால்வாயை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதாக கூறி ஆய்வு செய்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கடந்த 2011 ஆம் ஆண்டு சோழவந்தான் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தபோது தேனூர் கால்வாயை சீரமைக்க சொல்லி மனு அளித்திருந்தோம். ஆனால் அப்போது ஐந்து வருடங்கள் எம்எல்ஏவாக இருந்த கருப்பையா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கடேசன் எம் எல் ஏ விடமும் தேனூர் கால்வாயை சீரமைக்க சொல்லி மனு கொடுத்திருந்தோம் அவரும் ஐந்து ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் தேனூர் கால்வாய் சுகாதாரமற்ற முறையில் உள்ள வைத்தியநாதபுரம் பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரித்தில் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் தற்போது அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்ற நிர்வாகிகள் எம்எல்ஏ கருப்பையா உடன் சென்று தேனூர் கால்வாயை சீரமைப்பதாக கூறி ஆய்வு மேற்கொண்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது.

இதே கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி இந்த பாசன விவசாய பகுதிகளில் பயன்பெறும் தேனூர் விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் சீரமைக்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றது. அனைவருக்கும் நினைவு இருக்கலாம் தற்போது வரை துர்நாற்றம் வீசி வரும் இந்த கால்வாயை இப்போது ஞானோதயம் பெற்று சீரமைக்கப் போவதாக கூறும் இந்த பகுதி பேரூராட்சி கவுன்சிலரிடமும் பலமுறை இது குறித்து மனு அளித்திருந்தோம் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது தங்களின் சுய லாபத்திற்காக அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்ற பின்பு இந்த தேனூர் கால்வாயை சீரமைக்கப் போவதாக கூறுகின்றனர்.

மேலும் ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றுள்ளனர் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் யாரும் அங்கு செல்லவில்லை அதிமுக என்பது ஒரு ஆலமரம் தொண்டர்களே இதன் வலிமை ஆகவே சுய லாபத்திற்காக தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு சென்றவர்களால் அதிமுக என்றும் அழிந்து விடாது இதை தொண்டர்கள் உணர்ந்து கட்சியை வலுப்படுத்த செயல்பட வேண்டும் இவ்வாறு தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதிமுக தலைமை தங்கள் கட்சி நிர்வாகிகளில் சுனக்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அடிமட்ட தொண்டர்கள் அதிமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.