• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026

BySeenu

Jun 29, 2026

கோவையில், சென்னை மொபைல்ஸ் சார்பில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026 கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை மொபைல்ஸ் சார்பில் OPPO Speed Test 2026 நிகழ்ச்சி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் மோட்டார்ஸ் போர்ட்ஸ் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதல் கட்டமாக நடைபெற்ற விழாவில் OPPO நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன்களான OPPO Find X Ultra மற்றும் OPPO Reno 16 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், புதிய மாடல்களின் கேமரா திறன், செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள், அதிவேக செயல்திறன் மற்றும் நவீன வடிவமைப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற OPPO Speed Test 2026 நிகழ்ச்சியில், வேகம், சாகசம் மற்றும் தொழில்நுட்பம் ஒன்றிணைந்து அமைந்தது. நிகழ்ச்சியில் நடைபெற்ற Drift Zone சாகச நிகழ்ச்சி, Super Bikes Display, Vintage Cars Display, Formula F2 Cars Display, Monster Truck காட்சி மற்றும் Tuned Cars Display ஆகியவை பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக OPPO நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய OPPO மாடல்களை அறிமுகப்படுத்தினர்.

சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் சம்சுஅலி மற்றும் துணை இயக்குநர் ஆதில் ஆகியோர் பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாமல், அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்பதே சென்னை மொபைல்ஸின் நோக்கம் என்றும் OPPO Speed Test 2026 அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றனர்.