• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,

ByP.Thangapandi

Jun 25, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது, இந்த கிராமத்திற்கு நிரந்தரமாக குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இக்கிராம மக்கள் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-யிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்,

உசிலம்பட்டி வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கவணத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை சரி செய்ய ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்க இன்று திடீர் நகர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதன் மூலம் இக்கிராம மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் கிடைக்கும் என ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.