• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேட்டி..,

ByP.Thangapandi

Jun 25, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி அரசு உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் விடுதியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் எம்எல்ஏ – க்கள் கல்லானை, விஜய் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது பள்ளி கட்டமைப்பு வசதி, விடுதிகளில் கழிப்பறை மற்றும் உணவின் தரம் குறித்து உணவை உண்டு அமைச்சர் ஆய்வு செய்தார்., மேலும் ஆய்வின் போது முதல்வர் விஜய் நடித்த படத்தின் பாடல்களை மாணவர்கள் இசைக்கருவிகள் மூலம் இசைத்து காட்டியதை அமைச்சர் ரசித்து மாணவர்களை பாராட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார்.,

பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களுக்கு டிஎன்டி ஒன்றை சான்று கோரிக்கை முதல்வரின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும்.,

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது விரைவில் சரி செய்யப்படும் என்றும்,

கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

விடுதிகளில் பராமரிப்பு குறைபாடுகள் உள்ளது அதை அதிகாரிகள் காலம் தாழ்த்தாது சரி செய்ய உத்தரவிட்டுள்ளோம் என பேட்டியளித்தார்.