• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய் பிறந்தநாள்: மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய தவெகவினர்..,

ByKalamegam Viswanathan

Jun 22, 2026

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மதுரை சிந்தாமணி பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி தலைமையில் கட்சியினர் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.