• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தாமாக முன்வந்து ரத்த தானம் செய்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார்..,

ByKalamegam Viswanathan

Jun 20, 2026

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் தமிழக சட்டமன்றம் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் நேரில் கலந்து கொண்டார். முகாமினை தொடங்கி வைத்ததுடன், அவரே முன்வந்து ரத்ததானம் செய்து, அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார். தொடர்ந்து, முகாமில் ஆர்வமுடன் பங்கேற்று ரத்ததானம் வழங்கிய கொடையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

முகாமை முடித்துக் கொண்டு அமைச்சர் தனது காரில் புறப்பட்ட போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களைக் கண்டதும் திடீரென காரில் இருந்து கீழே இறங்கிய அமைச்சர், நேரடியாக பொதுமக்களை நோக்கிச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர், தங்களுக்குப் பகுதிக்குச் சரியாகக் குடிநீர் வரவில்லை என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்தனர். பொதுமக்களின் குறையை கேட்டறிந்த அமைச்சர், “இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் இக்குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்” என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.