• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சிந்தாமணி பதுவை புனித அந்தோனியார் ஆலயம் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Jun 17, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பழமை வாய்ந்த பதுவை புனிதர் அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 78 ஆம் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக புனிதரின் திருக்கொடி மேளதாளங்கள் முழங்க சிந்தாமணி, அனுப்பானடி பகுதிகளில் வீதி உலாவாக வந்து ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் திருச்சபையினர் முன்னிலையில் வேதங்கள் சொல்லப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர் பின்னர் சிறப்பு கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 27ஆம் தேதி அந்தோனியார், வேளாங்கண்ணி மாதா, மிக்கல் ஆண்டவர் சப்ரத்தில் வைத்து தேர்பவனி நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் பங்கேற்பார்கள் அடுத்த நாள் அன்பின் விருந்தாக சமபந்தி நிகழ்ச்சியும் நடைபெறும்.