• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் !!!

BySeenu

Jun 17, 2026

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடந்தது  அப்போது கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.  கூட்டம் நடைபெற்ற இடம் உண்டு மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அட்டையுடன் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர் பிரபாகரன் கூறும்போது ;

கோவை மாநகராட்சியில் மேயராக தி.மு.க உள்ளது. மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் நடந்து உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட சாலை மீது மீண்டும் மீண்டும் சாலைகளை போட்டு உள்ளனர்.  இதனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று குப்பை அள்ளும் பணியிலும் முறைகேடு நடக்கிறது. குப்பைகள் அள்ளப்படாத நிலையில் அதை அள்ளியது போல் காட்டுகிறார்கள். 

குப்பை கிடங்கு பிரச்சனையிலும் முறையீடு நடந்து உள்ளது. எனவே கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும். இந்த மாநகராட்சியை கலைக்க வேண்டும். என்று அவர் கூறினார். தொடர்ந்து கலைத்திடு கலைத்திடு மாநகராட்சியை கலைத்திடு அமைத்திடு அமைத்திடு விசாரணை குழு அமைத்திடு என்று இருவரும் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்கள் மாநகராட்சி கூட்டத்திற்கு சென்றனர்.