• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை..!

ByP.Thangapandi

Jun 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்து (43) நேற்று இரவு குரு மஹால் அருகே மரத்தில் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் உசிலம்பட்டி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்த நிலையில்,

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் முத்து- வின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு குடும்ப பிரச்சினையா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உசிலம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.