• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jun 15, 2026

தொடக்கல்வித்துறையில் புதிய விதியின் படி இடைநிலை ஆசிரியர் பணியில சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்த பின்னரே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியும். தொடக்க பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் பதவி உயர் பெற்று அடுத்து தொடக்கக்கல்வி தலைமையாசிரியர் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறவும் ஐந்து ஆண்டு தலைமையாராக பணியாற்றிய பிறகே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும்.

மேலும் பட்டதாரி ஆசிரியராக ஐந்தாண்டு பணியாற்றிய பிறகே நடுநிலை நிலை தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறமுடியும். இதலால் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவே இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு எனது எட்டா கனியாகவே மாறிவிடும் மாணவர்களுக்கும் பெருமளவில் பாதிப்பு அடைவார்கள்மாணவர்கள் நலன் கருதி காலி பணியிடத்தை சரி செய்யும் விதமாக புதியதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு மட்டும் ஐந்தாண்டுகள் பதவி உயர்வு கோர முடியாது என விதிய ஏற்படுத்தி அடுத்த நிலை பதவி உயர்விற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஐந்தாண்டு என்ற காலநிலைநிலை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும்

பணி நிரவல் கலந்தாய்வு பள்ளிக்கல்வித்துறை பின்பற்றி ஒன்றித்திற்குள்ளாகவும் மாவட்டத்திள்ளாகவும் பணி நிரவல் செய்ய வேண்டும்.

மேற்கண்ட கொரிக்கைகளை நிறைவேற்றி உதவிட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்களையும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் மதிப்புமிகு சந்திரமோகன்.இ.ஆ.ப அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு முனைவர் ச.கண்ணப்பன் அவர்களையும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு முனைவர் பூ.ஆ.நரேஷ் அவர்களையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.