• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில்மரக்கன்று நடும் விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 5, 2026

உலக சுற்றுச்சூழல் தினத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனை ஆட்சியையும் முன்னிட்டு, திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.

திருநள்ளாறு இந்திரா நகர் விளையாட்டு மைதானத்தில் (தபால் நிலையம் அருகில்) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருநள்ளாறு தொகுதி தலைவர் டி. பாலமுருகன் தலைமை வகித்தார். அமைப்பு பொதுச் செயலாளர் தசரத் முன்னிலை வகித்தார். திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் துரை சேனாதிபதி, அமுதாரணி, மாவட்ட தலைவர் முருகதாஸ், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராஜவேலு உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், பல்வேறு அணி தலைவர்கள், பிரிவு மற்றும் கேந்திர பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள், கிளை நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால சாதனை ஆட்சியை மக்களிடம் எடுத்துரைப்பதோடு, பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனை நிகழ்ச்சியின் திருநள்ளாறு தொகுதி பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியின் பொறுப்பாளர் கே. சக்தி ஆகியோர் செய்திருந்தனர்.