• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பிஎஸ்என்ஏ கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

ByS.Ariyanayagam

May 30, 2026

பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான 38-ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வணிக மேலாண்மைத் துறையில் எம்.பி.ஏ (M.B.A) 162 மாணவர்கள் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையில் எம்.சி.ஏ (M.C.A) 107 மாணவர்கள் என மொத்தம் 262 மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

இவ்விழாவில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். வணிக மேலாண்மைத் துறையில் எம்.பி.ஏ (M.B.A) ஆறு மாணவர்கள் (3. 3), கணினி பயன்பாட்டியல் துறையில் எம்.சி.ஏ (M.C.A) ஆறு மாணவர்கள் என மொத்தம் 12 மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்தனர். அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தரவரிசை பெற்ற மாணவர்கள் வணிக மேலாண்மைத் துறை 2022-24 BATCH ஜெயஜோதி.M – முதல் இடம்
சௌந்தர்யா.S – இரண்டாம் இடம்
சௌபர்ணிகா.P – மூன்றாம் இடம்
2023-25 BATCH
பூர்ணிமா. T – முதல் இடம்
மஹேஸ்வரி.R – இரண்டாம் இடம்
சௌமியா. G – மூன்றாம் இடம்
கணினி பயன்பாட்டியல் துறை
2022-24 BATCH
அனிதா.A – முதல் இடம்
தனுஷா.V – இரண்டாம் இடம்
சக்தி பிரியா.R – மூன்றாம் இடம்
2023-25 BATCH
ஐஸ்வர்யா.M – முதல் இடம்
ஸ்வேதா.D – இரண்டாம் இடம்
ஜெசிமா யாஸ்மின்.A – மூன்றாம் இடம்

இவ்விழாவிற்கு (Head of Campus Relations, SHRM – Senior Certified Professional, HCL Tech,) வளாக உறவுகள் தலைவர், SHRM – மூத்த சான்றளிக்கப்பட்ட நிபுணர், HCL டெக் சென்னை இயக்குநர் பிரசாத்.P சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

இவ்விழாவானது கல்லூரியின் தலைவர் K.தனலட்சுமி அம்மாள், முதன்மைத் தலைவர் R.S.K. ரகுராம் மற்றும் டிரஸ்டி சூர்யா ரகுராம் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் D.வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார்.இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பிரசாத்.P மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் S.மணிமாறன், கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் P.ஜெகநாதன், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். இவ்விழாவின் இறுதியில் P.S.N.A. கல்லூரி நிர்வாகம் பட்டங்களைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டது..