• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓய்வை அறிவித்தார் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்..


இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிலிருந்து இன்று விடைபெறுகிறேன், இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மனமார்ந்த நன்றி”. என்று பதிவிட்டுள்ளார்..


இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங், 23 ஆண்டுகால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்றுடன் விடைபெறுகிறார்..