• Tue. May 19th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் கூட்டம்..,

ByP.Thangapandi

May 19, 2026

உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த திட்ட பணிகள் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 110 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு சோதனை அடிப்படையில் மூன்று முறை நீர் திறக்கப்பட்டது., அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் இரண்டு முறை நீர் திறக்கப்பட்டது.,

இந்த 58 கிராம பாசன கால் வைக்கட்டும் மூலம் தேனி,திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் சுமார் 35 கண்மாயிகள் இதன் மூலம் நீர்ப்பாசன வசதி பெரும் சூழல் உள்ளது.,

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கருப்பு கோவிலில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் சங்கம் கூட்டம் தலைவர் ஜெயராஜ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.,

இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக அரசு க்கும், அமைச்சர்கள், உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் மகாலிங்கம்- கும் நன்றி தெரிவித்தல், வைகை அணையில் 58 கிராம பாசன கால்வாய் மதகினை குறைத்து வைத்து வருடம் தோறும் தண்ணீர் பெரும் வகையில் நீர்ப்பாசனத் திட்டமாக 58 கிராம பாசன கால்வாய் திட்டத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.,

இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ, அமைச்சர் நிர்மல்குமார்-யை சந்தித்து அவர்கள் மூலமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்- யை சந்தித்து 58 கிராம பாசன கால்வாய் திட்டத்தை நீர் பாசன திட்டமாக அறிவிக்க வலியுறுத்துவோம் என விவசாய சங்கத்தினர் பேசினர்.,

இதில் விவசாயி சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றினர்.,