• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சைகட்டி ஊராட்சி பெரியார் நகரில் சுமார் 500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அங்குள்ள உழவர் சந்தை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தெரு குழாயிலும் வீட்டுக்கு குழாய்களிலும் முறையாக தண்ணீர் வராமல் இருந்து வந்தது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் கச்சை கட்டி வாடிப்பட்டி சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், ஊராட்சி ஒன்றிய செயலாளர் புஷ்பலதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.