மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சிட்கோ தொழில்பேட்டை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையை கடப்பதற்காக 17 வயது சிறுமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் கார் வருவதை கவனிக்காமல் சாலையை கடந்துள்ளார்.

அப்பொழுது அதிவேகமாக மோதியதில் சிறுமியும் பின்னால் உட்கார்ந்து இருந்த மகாலட்சுமி வயது 35 இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான அவசரகால ஊர்தி இருவரையும் மீட்டு உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர்களை பரிசோதித்த போது இருவருக்குமே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.

சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது சிறுமி இருசக்கர பின்னால் அமர்ந்திருந்த மகாலட்சுமிக்கு மயக்கம் வந்ததால் இச்சிறுமி வாகனத்தை ஓட்டியதாக தகவல் வந்துள்ளது.




