• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

2023ல் பாஜகவால் தான் அதிமுகவினர் கூட்டணியை முறித்தார்கள்-நிர்மல்குமார்..,

ByKalamegam Viswanathan

Apr 14, 2026

எல்லா இடங்களிலும் எங்கள் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. 85 வயதுக்கு மேற்பட்டவர் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது.

முதியோர்களை திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். வீடியோ ஆதாரத்துடன் உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம்.

காவல் உயர் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்திற்குப் பிறகு இரண்டு இடங்களில் பாதுகாப்பு சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. திமுக பணம் கொடுக்கத் தொடங்கி விட்டனர். ஒரு சில இடங்களில் 8000 ரூபாய் கூப்பன் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

தபால் வாக்கில் ஊழியர்கள் தவறு செய்தால் பொதுமக்கள் உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் புகார் கொடுங்கள்.

திருப்பரங்குன்றத்தில் 8000 டோக்கன் கொடுப்பதால் கேள்விப்பட்டோம் நாங்க செல்லும் இடங்களில் பொதுமக்களே சொல்கிறார்கள், அவர்கள் என்ன டோக்கன் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று சொல்கிறார்கள். பொதுமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

எடப்பாடி தொகுதியில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.

கார்த்திக் சிதம்பரம் குடும்பத்திற்காக ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக சிதம்பரம் மொத்த காங்கிரஸ் கட்சியில் திமுகவில் அடமானம் வைத்தவர்கள்.

கோபாலபுரம் குடும்பம் இருப்பதைப் போல தமிழக காங்கிரஸ் கிடைக்க சிதம்பரம் குடும்பம் போதும். அவர்களுக்கு என்ன நிர்வாகத் திறமை உள்ளது. தனிப்பட்ட முறையில் நின்றால் கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் வாங்குவாரா. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் ஹம்மர் காரை தேடி உதயநிதி வீட்டில் சிபிஐ ரைடு நடந்தது.

பாதுகாவலர்களுக்கு நாங்களும் அறிவுறுத்துகிறோம். ஆனால் சில நேரங்களில் அவர்களும் அழுத்தத்துக்கு உள்ள ஆவதால் உணர்ச்சி வசப்படுகிறார்கள். தொண்டர்களை தாண்டி அதிகமாக பொதுமக்கள் இருக்கிறார்கள். காவல்துறை தவித்து வேறு யாரும் கட்டுப்படுத்த முடியாது. அறிவிப்புகளை முதல் நாள் மாலை தான் வெளியிடுகிறோம். அதையும் மீறி பெரும்பாலான பொதுமக்கள் தான் வருகிறார்கள்.

ஒரு சில இடங்களில் பேச அனுமதி இல்லை அதனால் சைக்கிள் செல்வது இது போன்ற பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

கடலூரில் மேற்கு மாவட்ட இருந்தது மத்த இடங்களில் திட்டமிடப்பட்டதாகவும், இரத்தானதாகாவும் வரும் தகவல் உண்மை அல்ல.

உதயநிதியும் அவர் அப்பாவும் எப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நமக்கு தெரியும். இந்த ஐந்து ஆண்டுகளாக மலையின் போது கூட உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை கிடைத்தால் 24 மணி நேரமும் களத்தில் எங்கள் தலைவர் இருப்பார்.

தற்குறி பழனிசாமி என்று அண்ணாமலை சொன்னார், தவழ்ந்து காலில் விழுந்த பழனிச்சாமி என்று சொன்னார், பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பதற்காக நான் இந்த வேலையில் இருக்கிறேன் அந்த பதவி வெங்காயம் போன்று என சொன்னார். எல்லாத்தையும் விட்டு விட்டு இன்று அண்ணன் பழனிசாமி என்று சொல்கிறார். துப்பாக்கி பிடித்த கை என்றெல்லாம் பேசினார். அதிமுக பைல்ஸ் வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.

அதை வெளியிடுவாரா என்று கேளுங்கள். திமுக பைனான்ஸ் ஆளுநர் மாளிகையில் அவர் கொடுத்த டிரம்ப் பெட்டி சும்மா இருக்கிறது. இவர் 420 மலை என்று அப்போதே நாங்கள் சொன்னோம். அண்ணாமலை இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

உயர்தர அறிக்கையை பிரித்து பிரித்து வெளியிடுவது எங்களின் யுக்தி.

நிறைய தவறான தகவல் வருகிறது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு படம் வெளியானதுக்கு காரணம் என்ன, மேலும் மன உளைச்சலை கொடுப்பதற்காக செய்கிறார்கள். அரசியல் காரணங்களுக்கு அழுத்தம் கொடுத்தாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தீபம் ஏற்றுவதாக ராஜன் செல்லப்பா சொல்லி இருக்கிறார். ஐந்தாண்டுகளாக இங்கு தான் இருக்கிறார். ஆனால் அவர் வெளியிலேயே வரவில்லை என்று சொல்கிறார்கள். அதிமுக எப்போது பாஜகவுடன் சேர்ந்தார்களோ அப்போதையே அவர்கள் தனித்தன்மையை இழந்து விட்டார்கள். அம்மாவையும் புரட்சித்தலைவரையும் மறந்து மோடியையும், அமித்ஷாவையும் ஏற்றுக் கொண்டதால் தான் இன்று அதிமுக பல இடங்களில் மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது. அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர் ஆவதற்கு டெல்லியை அணுக தொடங்கி விட்டதாக தகவல் வருகிறது.

2023ல் பாஜகவால் தான் தோற்றம் கூறி கூட்டணியை முறித்தார்கள் என்றும் ஒன்று கூடி கொண்டார்கள். வெற்றி பெற மாட்டோம் என தெரிந்த பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு காரணம் அவர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு தான்.

எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக பாஜக என இரண்டு பேரும் தான் காரணம். இந்த ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக தான் இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசிடம் எந்த கடிதமும் கொடுக்கவில்லை.

நாங்கள் கொடுத்த அழுத்தத்தால் தான் டிஜிபி முதல் அதிகாரிகளை மாற்றி இருக்கிறார்கள். நல்ல அதிகாரிகளை கொண்டு வர வேண்டும். ஏனென்றால் நிறைய அதிகாரிகள் திமுகவிற்கு தான் வேலை பார்க்கிறார்கள். மதுரையில் நிறைய பேர் அமைச்சர் மூர்த்தி சொல்வதை தான் கேட்கிறார்கள்.

பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டால் கேட்டவுடன் பதில் சொல்லாமல் அனுமதி கேட்ட தேதிக்கு முந்தைய நாள் அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள்.

இரண்டு மணி வரை தான் அனுமதி என காவல்துறை சொன்னதால் தான் காரைக்குடியில் பேசவில்லை.