• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

இந்திய துணை தேர்தல் ஆணையர் கோவையில் அதிரடி ஆய்வுக் கூட்டம் !!!

BySeenu

Apr 13, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவையில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து மிக முக்கியமான ‘ரிவியூ’ (Review) கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து உள்ள சூழலில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு இந்தியத் தலைமைத் தேர்தல் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தலைமை தாங்கினார்.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், கோவை மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இதில் பங்கேற்றுத் தங்களது பகுதிகளில் செய்யப்பட்டு உள்ள தேர்தல் பணிகள் குறித்துப் ஆலோசித்து பேசி வருகின்றனர்.

​மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ‘கேம்பெயின்கள்’ (Campaigns) கோவை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், வாக்குப் பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள், வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் ‘சென்சிட்டிவ்’ (Sensitive) பூத்களில் செய்யப்பட்டு உள்ள கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தலைமைத் தேர்தல் துணை ஆணையர் மிகத் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறார்.

​தேர்தல் ஆணையத்தின் ‘புரோட்டோகால்’ (Protocol) படி, அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படைகளின் செயல்பாடுகள் மற்றும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க எடுக்கப்பட்டு உள்ள ‘நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் தற்போது தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விதிமீறல்கள் ஏதேனும் நடக்கிறதா ? என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்குக் கூடுதல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

​இந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, கோவை மண்டலத்தில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைப்பதற்கான இறுதி கட்ட விழிப்புணர்வுப் பணிகள் மற்றும் வாக்கு இயந்திரங்களைக் கையாளும் முறை குறித்த சோதனைகளை விரைந்து முடிக்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.