• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

அய்யம்பாளையம் அருகே நர்ஸ் தற்கொலை..,

ByS.Ariyanayagam

Apr 12, 2026

திண்டுக்கல் அய்யம்பாளையம் அருகே நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்லை அடுத்த அய்யம்பாளையம் ராமலிங்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி வினிதா (வயது 32).இவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் வினிதாவை தகாத வார்த்தைகள் கூறி தாக்கியதால் மனமுடைந்து காணப்பட்ட வினிதா விஷம் மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்