வெம்பக்கோட்டை அருகே சூரார்பட்டி கிராமம் உள்ளது.இக் கிராமத்தில் ஆறு நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வைப்பாற்றில் போர்வெல் அமைத்து மேல்நிலைதொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மோட்டார் பழுது காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் எடுக்க செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுவதால் தடை இல்லாமல் குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும் என வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
புகார் செய்து பல நாட்கள் ஆகியும் அதிகாரிகள் எதும் நடவடிக்கை எடுக்காதால் சாத்தூரில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் சூரார்பட்டி பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். .இது குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி, உள்ளிட்ட போலீசார் உடனடியாக விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாலை மறியலை கைவிடும்படி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடனடியாக குடிநீர் சப்ளை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.




