• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தேர்தல் நடத்தும் அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு..,

ByP.Thangapandi

Apr 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை உசிலம்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமார் தலைமையில் துவங்கியது.,

இதில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர், அஇபுதமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் இந்த வேட்புமனு பரிசீலனையில் கலந்து கொண்டனர்.,

3 மணி நேரத்திற்கும் மேலாக வேட்புமனு பரிசீலனையின் முடிவுகளை எந்த ஒரு வேட்பாளருக்கும் அவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டதா? இல்லையா? என தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமார் பதில் அளிக்கவில்லை எனவும், தன்னிச்சையாக செயல்படுகிறார் என மதுரை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளரிடம் நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டை மனுவாக அளித்தனர்.,

அதன் எதிரொலியாக 2:30 மணிக்கு மேல் ஒவ்வொரு வேட்பாளராக அழைத்து அவர்களது வேட்பு மனு ஏற்கப்பட்டதா, தள்ளுபடி செய்யப்பட்டதா என தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.,

அதன்படி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சூழலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தவெக, அஇபுதமமுக, பகுசன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 6 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 6 சுயேட்சை வேட்பாளர்கள் என 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது., என்றும் 10 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமார் தெரிவித்தார்.,