• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளர் பி.ராமுத் தேவர்..,

ByVasanth Siddharthan

Apr 4, 2026

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் பி.ராமுத் தேவர் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான பழனிவேலுவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்,
பாமக மாவட்ட செயலாளர் பரசுராமன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வெள்ளை கோபால் பார்வர்ட் பிளாக்தேசிய செயலாளர் ஜெயராம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்ட பிரபு, உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் அண்ணா சிலையிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் செய்திகளிடம் ராமுத்தேவர்

பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் வாரிசாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் தலைமையிலே புரட்சித்தலைவரின் பொற்க்கரம் கொண்டு இந்த தேர்தலிலே நாங்கள் போட்டியிட உள்ளோம்.

இந்த போட்டியானது தமிழ்நாடு முழுவதும் தெரியும் திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய வேட்பாளர்கள் எவ்வளவு பலமானவர்கள் என்று ஆனால் நாங்கள் வந்து அம்மாவின் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காக நாங்கள், பாமக , ஃபார்வேர்ட் பிளாக் ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம்

திண்டுக்கல் மக்களின் முக்கிய தேவையான குடிநீர் காலை சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே வருகிறது. அதுவும் பொதுமக்களுக்கு போதிய அளவு இல்லை. மாலையில் வருவதில்லை. தண்ணீர் வசதி இல்லை.

எங்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் உறுதியாக திண்டுக்கல் நகர் முழுவதும் மாலையில் தண்ணீர் கொண்டுவருவேன். மேலும் பொதுமக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வோம்.

உங்களுக்கு எதிராக பலமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் எதிர்த்து உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு,

என்னை எதிர்த்துப் போட்டிடும் அனைத்து வேட்பாளர்களும் மக்களுக்கு மாலை நேரம் தண்ணீர் வசதி வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் கீழ் மட்டத்திலிருந்து வந்தவன். திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய தேவை என்ன என்று தெரிந்து இந்த பிரச்சினையை நான் கையில் எடுத்து உள்ளேன். நிச்சயமாக வைகை அணையில் இருந்து தண்ணீர் நிச்சயமாக கொண்டு வருவேன் என கூறினார்.