• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வெற்றி தமிழர் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,

ByS.Ariyanayagam

Apr 4, 2026

வெற்றி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பழனிச்சாமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

திண்டுக்கல் தொகுதியை சிறப்புடன் செய்ய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க நான் ஏற்பாடு செய்வேன். மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்வேன். தொழிற்சாலைகள் திண்டுக்கல்லில் இல்லை.

திண்டுக்கல்லில் தனியார் ஓட்டுநர் பள்ளி உரிமையாளர் முத்துகிருஷ்ணன்,60. இவர் திண்டுக்கல் ஆலக்குவார்பட்டியை சேர்ந்தவர். இவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். இது குறித்து முத்துகிருஷ்ணன் கூறியதாவது:

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் நெருக்கடியில் உள்ளது. இதை வெளிப்புறத்துக்கும் மாற்றுவேன். மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அனைத்து நன்மையும் கிடைக்க ஏற்பாடு செய்வேன். குடிநீர்,
வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்வேன்,என்றார்.