• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

7 சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறும்-ஐ.பெரியசாமி உறுதி..,

திமுகவில் வேட்பாளராக திண்டுக்கல் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்த திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சரக்கரபாணி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் நாகஜோதி, நத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் செல்வக்குமார் ஆகியோர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.

அனைவருக்கும் திமுக நிர்வாகிகள் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து அனைவரும் திண்டுக்கல்லில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்துக்கு வந்தனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், பழனி சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன.

ஏப்ரல் 23 தேர்தலில், 7 தொகுதிகளிலும் 100 சதவீதம் வெற்றி பெற்று, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் பொற்கரங்களில் வெற்றிக் கனியை ஒப்படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் திமுக அவை தலைவர்கள் வழக்கறிஞர் காமாட்சி, மோகன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜாமணி, நாகராஜன், பிலால் உசேன், மாவட்ட பொருளாளர்கள் கு.சத்தியமூர்த்தி,
சாணார்பட்டி விஜயன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி,
திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா, மாநகர பொருளாளர் மீடியா சரவணன் மற்றும் திண்டுக்கல் மேற்கு, கிழக்கு அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.