• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.சி.மக்கள் உரிமை கட்சிசட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு..!

BySeenu

Mar 29, 2026

ஓ.பி.சி. சமூகத்தின் உரிமைகளை வலியுறுத்தி புதிதாக துவங்கி உள்ள “ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி” வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்,கட்சியின் தலைவர் ரத்தினசபாபதி இதனை தெரிவித்தார்.

ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்து வரும் மத்திய மாநில அரசுகள் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் ஓ.பி.சி. மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.

மேலும், ஓ.பி.சி. பட்டியலில் உள்ள பல சமூகங்கள் இன்னும் முன்னேற்றம் அடையாத நிலை தொடர்வதாகவும், அரசுகள் வழங்கும் 27% இடஒதுக்கீட்டிலும் பல பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல், மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிட்டு ஓ.பி.சி. மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் நிர்வாகிகள், ஓ.பி.சி. மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து அரசியல் தளத்தில் வலுவான குரலை எழுப்புவது தான் இக்கட்சியின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.