• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 15வது ஆண்டு விழா..,

ByK Kaliraj

Mar 26, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார்.செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் டாக்டர் விவேக் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் ஜோகோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த நற்செய்தியாளர் குப்புலட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேசியது

மென்பொருள் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், புதுமை சிந்தனை மற்றும் நேர்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.. சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தமிழ் பேச்சாளரும் நடிகருமான ஞானசம்பந்தன் கலந்து கொண்டு, பேசியது
கற்ற கல்விதான் நமக்கு முழுமையாக கை கொடுக்கும் உதாரணமாக நான் சிறுவயதில் கற்ற கல்வி தான் என்னை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவப் பருவம் அருமையானது அதனை அனுபவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியம் புத்தகங்கள் அதிகமாக படிக்க வேண்டும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும், தனது தகப்பனார் நூலகம் போன்றவர். தகப்பனார் இருக்கும்போது அவரை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வயதான காலத்தில் புறக்கணிக்க கூடாது அவ்வாறு புறக்கணித்தால் அவர் மறைந்த பிறகு வேதனை தெரியும். ஐயோ நம்ம பெற்றோருக்கு அனைவரும் நன்றி கடன் செலுத்த வேண்டும்.

சினிமா என்பது மாயைதான் நல்ல விஷயங்களை பின்பற்ற வேண்டும் மற்றவற்றை புறக்கணிக்க வேண்டும்

அவ்வாறு செய்தால் விதியை கூட நம்மால் ஜெயிக்க முடியும். எந்த விஷயம் நமக்கு வரவில்லையோ அதனை ஜெயிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய இலக்குகளை முடிவு செய்து கொள்ள வேண்டும் அதனை தொடர்ந்து மனதில் ஆசையாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் முழு வெற்றியை பெற முடியும். மனிதன் தான் படைப்பாளி கதைகள் தான் கற்பனை தரும் ஆகையால் உறவுகளை விட்டுக் கொடுக்காதீர்கள் என்று பேசினார். தனது நகைச்சுவை கலந்த உரையின் சிந்தனையூட்டும் மூலம் மொழி, பண்பாடு மற்றும் மாணவர் வாழ்க்கையின் மதிப்புகளை வலியுறுத்தி சிறுபுரையாற்றினார். முன்னதாக. கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வபாரதி கல்லூரியின் சாதனைகள், பல்கலைக்கழக தரவரிசைகள், வேலைவாய்ப்பு பதிவுகள் மற்றும் இணைபாடச் செயல்பாடுகளில் மாணவர்கள் பெற்றுள்ள வெற்றிகளை வெளிப்படுத்தும் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வான வேடிக்கை மற்றும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.