• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கே டி ஆர் அறிவிக்கப் பட்டதற்கு வரவேற்பு..,

ByK Kaliraj

Mar 26, 2026

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து சிவகாசி தேவர் சிலை அருகே அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்களின் பட்டியலை முதற்கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி .ராஜேந்திரபாலாஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து சிவகாசி தேவர்சிலை அருகே அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.